இழப்பீடுகளுக்காக பணியகத்திற்கு மூவரின் பெயர் பரிந்துரை

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான பணியகத்துக்கான உறுப்பினர்களாக நியமிப்பதற்கு மூன்று பேரின் பெயர்களை சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்துள்ளது.

கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, எம்.ஐ.எம்.ரபீக் ஆகியோரின் பெயர்களே சிறிலங்கா அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை கூடிய அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில், மேலும் இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கான நேர்காணல் இடம்பெற்றது, விரைவில் அவர்களை பரிந்துரைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போருக்குப் பிந்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உருவாக்கப்படும் இரண்டாவது அதிகாரபூர்வ பொறிமுறையான இழப்பீடுகளுக்கான செயலகத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

No comments