பேச்சுக்கள் தோல்வி! ரொக்கெட் ஏவுதளங்களைப் புதுப்பிக்கும் வடகொரியா

வடகொரியா -அமெரிக்க பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையிட்டு வடகொரியா தனது முக்கிய ரொக்கெட் ஏவுதளத்தை புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

வடகொரியாவின்  தலைநகர் பியாங்காங்கில் உள்ள டோங்சாங்-ரி ரொக்கெட் ஏவுதளத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறுவதை தென்கொரியாவின் செயற்கைகோள் படங்களை எடுத்துள்ளன.

தகவல் அறிந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். வடகொரியா தனது ரொக்கெட் ஏவுதளத்தை புனரமைப்பது  உண்மையாக இருந்தால், அது மிகவும்  தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். அத்துடன் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments