போராட்டத்திற்கு வலுச்சேர்க்க கிழக்கில் இருந்து மாணவர்கள்!


சிறிலங்கா அரசிற்கான கால நீடிப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி எதிர்வரும் 16ம் திகதி அன்று யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கிழக்கு பல்லைக்கழக மாணவ சமூகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

40 வது ஜெனிவா அமர்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்காக மாணவர்களாகிய நாம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் வடக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஜெனிவா அமர்வில் சிறீPலங்கா அரசிற்கான கால நீடிப்பு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி  16ம் திகதியன்று யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவிருக்கின்றோம்.

அதே போன்றே வருகின்ற 19ம் திகதியன்று மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மக்கள் அனைவரும் பங்களிக்குமாறும் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சாரப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் கோரியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றிரவு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வழைப்பினை விடுத்துள்ளார்.

No comments