நாடி பிடிக்கின்றார் அமெரிக்க தூதர்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக, அமெரிக்க தூதுவர்  கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விவாதம் வரும் 20ஆம் நாள் நடக்கவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments