வரவுசெலவுத்திட்டத்தை முறியடிக்க களமிறங்கும் மகிந்த அணி

பட்ஜட்டுக்கு எதிராகவும், விரைவில் தேர்தலை  நடத்துமாறு வலியுறுத்தியும் மஹிந்த – மைத்திரி கூட்டணி எதிர்வரும் 8 ஆம் திகதி கண்டியில் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் , சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
பட்ஜட்டிலுள்ள குறைப்பாடுகளை சுட்டிக்காட்டியும், மக்களுக்கான ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு வலியுறுத்தி பேரணியும் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. கண்டி மாவட்டத்திலுள்ள எம்.பிக்களே ஏற்பாட்டாளர்களாக செயற்படுகின்றனர்.
அன்றைய தினம் ( 8) பாதுகாப்பு  அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச  அரசியல் மேடை ஏறுவார் என ஜீ.எல். பீரிஸ் நேற்று அறிவித்திருந்தார். எனினும், தான் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரை பங்கேற்க வைப்பதற்குரிய முயற்சியில் மஹிந்த அணி உறுப்பினர்கள் சிலர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதற்கு பஸில் தரப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments