மாவையினை தொடர்ந்து போராட களமிறங்கும் சுகிர்தன்!


வலிகாமம் வடக்கு பிரதேசத்தில், தனியார் காணி உள்ளடங்கலாக 232 ஏக்கர் காணியை கடற்படை தளம் அமைப்பதற்கும் சுற்றுலா அதிகாரசபையின் தேவைகளுக்குமாக, காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில், எதிர்வரும் 22ம் திகதி வெள்ளிக்கிழமை காணி திணைக்களத்தால் நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஓர் அங்குள நிலத்தைக் கூட எம்மை மீறி அவர்களால் அளவிடமுடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் செயலாளராகவும் தற்போது சுகிர்தன் உள்ளார்.

ஏற்கனவே முன்னாள் ஆளுநர் சந்திரசிறியின் கோரிக்கையின் பேரில் பலாலி படைத்தளத்திற்கு வீதி அமைத்தமை மற்றும் சுன்னாகம் கழிவு ஓயில் கலந்த குடிநீர் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றமையென சுகிர்தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே வவுனியா மாவட்டத்தில் புதுக்குளம்- மூனாயமடு கிராமத்தில் இந்து ஆலயம் அமைந்துள்ள காணியை விகாரை அமைப்பதற்கு வழங்குமாறு பௌத்த பிக்கு ஒருவர் கோரியுள்ளார்.

புதுக்குளம் மூனாயமடு கிராமத்தில் இந்து ஆலயம் ஒன்று அமைந்துள்ள காணியை 1995ம் ஆண்டுக்கு பின்னர் இராணுவம் தம்வசப்படுத்தியது. பின்னர் அங்கு விகாரை ஒன்றையும் இராணுவம் அமைத்துள்ளது.

இந்நிலையில் ஆலய காணியை இராணுவம் தமது கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ள நிலையில் இராணுவத்தினர் தங்கியிருந்த காலத்தில் அமைத்த விகாரையை அடிப்படையாக கொண்டு அந்த காணியை தருமாறு பௌத்த பிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திடம் கேட்;டுள்ளார்.

No comments