முல்லையில் நிலப்பிடிப்பு மும்முரத்தில் தொல்லியல்!முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களை கையக்கப்படுத்தும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் மும்முரமாகியுள்ளது.அவ்வகையில் முல்லைதீவிலுள்ள 40 இடங்கள் தமது ஆளுகையின் கீழ் உள்அடங்குவதனால் அவற்றினை உடன் அளவீடு செய்து தருமாறு தொல்லியல் திணைக்களம் நில அளவைத் திணைக்களத்திடம் கோரியுள்ளது.இவ்வாறு கோரப்படும் இடங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதியும் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியென தொல்லியல் திணைக்களம் உரிமை கோரியுள்ளது.


சத்தமின்றி முல்லைதீவில் தொல்லியல் திணைக்களம் தனது கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழர் பிரதேசங்களை பௌத்தமயமாக்குவதில் மும்முரமாகியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments