"கலைத்திறன்" இறுதிப்போட்டி சிறப்புற நிறைவுபெற்றது!

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகம் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவம் ஊடாக ஆண்டு தோறும்  "கலைத்திறன்" போட்டி நாடாத்தப்படுகின்றது.தமிழாலய மாணவர்கள் கலைத்திறன்களை வெளிக்கொணரவும் தமிழ் கலாச்சார திறமைகளை பேணும் விதமாகவும் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் மாணவர்களின்  முன்னேற்ற முயற்ச்சிக்காய் 2019ம் ஆண்டுக்கான கலைத்திறன் இறுதிப்போட்டி கற்றிங்கன் நகரில் சிறப்புற நடைபெற்றது.
இதில் கரகாட்டம்,மயிலாட்டம் , காவடி, குதிரையாட்டம், நாட்டிய நாடகங்கள், மற்றும் தமிழர் வரலாற்றை பிரதிபலிக்கும் நாடகங்களும் இடம்பெற்றது. பக்குபற்றிய மாணவர்களுக்கும் வெற்றியாளர்களும் மதிப்பளிக்கப்பட்டு நினைவு சான்றுகளும் வழங்கப்பட்டது.

No comments