யாழ்.மாநகரசபையில் சுகாதாரத்திலும் அரசியல் தலையீடு!


யாழ் மாநகரசபையில் அரசியல் தலையீட்டால் நாறிக்கிடக்கும் சுகாதார துறையினை காப்பாற்ற அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மருத்துவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அண்மையில் வைத்திய பொதுச்சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றத்திற்கு புறம்பான இடமாற்ற நிலைமை நிலவி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவ் சுகாதார வைத்திய  அதிகாரி பணிமனையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு சுகாதார வைத்திய அதிகாரி, ஒரு மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஒரு வைத்திய அதிகாரி குறிப்பிட்ட ஒழுங்குவிதிக்கமைய கடமையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு இருக்க, இங்கு கடமையில் இருக்கும் சுகாதார வைத்திய அதிகாரி .உமாசுதன் என்பவரின் இடமாற்றத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்ட போதிலும்.உமாசுதன் தொடர்ந்தும் அதே பதவியில் குறித்த நிலையத்திலேயே தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றார். இவரது பொதுச்சேவை ஆணைக்குழுவின் இடமாற்ற விதிகளுக்கு அமைவான இடமாற்ற மறுப்பில் கௌரவ சுகாதார அமைச்சின் தலையீடு இருக்கின்றது என்பது நம்பத்தகுந்த வட்டாரங்;களின் மூலம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. யாழ் மாநகர சபையில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கும் இவரை யாழ் மாநகர சபையில் தொடர்ந்தும் பணியில் வைத்திருப்பதற்கும் தொடர்பு இருக்கின்றதோ?  இவரது பணி நியமிப்பில் அரசியல் ஊழல்கள் இருக்குமோ? என்ற சந்தேகத்திற்கு இட்டுச் செல்கின்றது. மேலும் இவ்வாறு ஒரே பணிமனையில் இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பணியாற்றுவது குறித்த பணிமனையின் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதோடு சுகாதார வைத்திய அதிகாரிக்கு சுகாதாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துவது சங்கடமான நிலை உள்ளது.

கடந்த காலங்களில் பிற துறைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் வைத்தியத்துறையில் இவ்வாறான ஒரு அரசியல் தலையீட்டினை எங்கும் காணமுடியாதமையும், தற்போது ஏற்பட்டுள்ள நிலையுடன்; எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதில் சந்தேக நிலையே உள்ளது. இலங்கையில் வைத்திய அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகின்றபோதிலும் யாழ் மாநகரசபைக்குட்பட்ட சுகாதார  வைத்திய அதிகாரி பணிமனையில் அளவுக்கதிகமான சுகாதார வைத்திய அதிகாரிகள் கடமையில் (ஒரே இடத்தில்) உள்ளதும் கவலைக்கிடமானதே. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவர்களுக்கான பண ஒதுக்கீட்டினை வழங்குவோர் மீது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக அறிந்து உரிய பொறுப்பதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவர உள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம். வைத்தியத்துறையில் ஏற்படுகின்ற பிரச்சனைக்கு பொறுப்புக் கூறவேண்டிய கௌரவ சுகாதார அமைச்சரே இதற்கு உடந்தையாக உள்ளதால் 05.03.2019 இற்குள் உரிய முறையில் இடமாற்றம் அமுல்படுத்தப்படாத பட்சத்தில் சரியானதும் சட்டத்திற்கு உட்பட்டதுமான வைத்திய சேவையைத் தொடர அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் வேறு வழியின்றி யாழ் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குஉட்பட்ட சகல அரச வைத்தியர்களும் 06.03.2019 புதன்கிழமை அன்று அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர் என்பதனையும் இதனால் ஏற்படக்கூடிய சகல பிரச்சனைகளுக்கும் கௌரவ அமைச்சர், யாழ்மாநகர சபை முதல்வர் மற்றும் யாழ் மாநகர சபை ஆணையாளர் ஆகியோரேபொறுப்புககூறவேண்டும்.

அடையாளப் பணிப்புறக்கணிப்பின் பின்னரும் தீர்வு எட்டப்படாதவிடத்து மேலும் பணிப்புறக்கணிப்பைதொடர்ந்தும் தொடர்வதுடன் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை விஸ்தரிப்பதை எமது தாய் சங்கத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளவுள்ளோம் என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றுள்ளது. 

No comments