தமிழ் பண்பாடு அது தன்பாடு: நாறுகின்றது தமிழரசு!


தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி வட்டார இரண்டாம் கட்ட முக்கியஸ்தரர்களது தனிநபர் ஒழுக்கம் தொடர்ந்தும் சந்தி சிரிப்பதாகவே உள்ளது.ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரது அலுவலகத்தில் நடந்த சோதனை நடவடிக்கையொன்றின் போது ஆணுறைகளுடன் உறுப்பினர்கள் சிலர் கைதான கதை முதலில் அரங்கேறி அம்பலமாகியிருந்தது.

இந்நிலையிலட தனது முறையற்ற தொடர்புக்கு இடையூறாக இருந்த 12 வயது சிறுவனை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி நகர செயற்பாட்டாளர் ஒருவர் தாக்கியதனால் அச் சிறுவன் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான். உடனே அயலவர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறான்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை குறித்த நபர் குடும்ப பெண்ணொருவரை தேடி சென்றிருந்த நிலையில் அங்கு அப்பெண்ணின் 12 வயது மகனுடன் முரண்பட்டுள்ளான். இதன் போது அச்சிறுவனை தாக்கியுமுள்ளான். சிறுவன் கிணற்றுக்குள் வீழ்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டுள்ளான்.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற அப்பகுதி தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த சிறுவன் கிணற்றுக்குள் வீழ்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அயலவர்கள்; தெரிவிக்கின்றனர்.

No comments