அம்மாச்சியில் ஆளுநரது காலை உணவு!


இலங்கை திரும்பியுள்ள வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு காலை சென்று உணவருந்தியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  இன்று (26) காலை திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை அம்மாச்சி உணவகத்திற்கு இன்று மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க பதவியேற்கும்போது, இhணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், குறித்த இராணுவ வீரர்களுக்கு எதிராக சிவில்,இராணுவ சட்டங்களின்படி தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுமென உறுதியளித்திருப்பதாகவும் அதே நிலைப்பாட்டில் அவர் தற்போதும் இருப்பதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்சலட்டின் அறிக்கையில், 'கொசிப் இணையத்தளங்களில்  பெற்றுகொள்ளப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமான நிலப்பரப்பு காணப்படுவதால் அதிகளவான இராணுவ முகாம்கள் காணப்படுதாகவும் கூறினார்.

வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிக்கும் 75 சதவீதமான காணிகளே விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்சலட்  தெரிவித்திருக்கும் கருத்து தவறெனக் கூறிய அவர், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 92 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதென்றார்.

இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமெனத் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலை புலிகள், இராணுவத்தினர் என இரு தரப்பினர் மீதும் யுத்தக் குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை. உள்நாட்டு நீதிமன்றங்களே அதனை விசாரணை செய்ய முடியும்.யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான சுயாதீனத்தன்மையும் இயலுமை, நமது நாட்டு நீதித்துறைக்கு இருப்பதாகவும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதிக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மிச்சல் பச்சலேட்டின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், இலங்கைக்கு அனுப்பட்டதாகவும் எனினும், பிரதமர் அலுவலகம் அதனை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சுமத்தினார்.

No comments