அமெரிக்க குடியுரிமையை விலக்கும் கோத்தா

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச  அமெரிக்காவின் குடியுரிமையை விலக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்த விண்ணப்பத்தை அவர் கடந்த 6ஆம் திகதி அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்தார் என்று அருண சிங்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் ஜனாபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என்று அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன்,  மூத்த சகோதர்ரான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தன்னை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய அழைத்துள்ளதாகவும் சரியான நேரத்தில் தான் அரசியல் களத்துக்கு வருவேன் எனவும் கோத்தாபய ராஜபக்ச கடந்த வாரம் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே அவர் தனது அமெரிக்க குடியுரிமையைத் துறக்க அந்த நாட்டுத் தூதரகத்திடம் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments