ஆமா நாம மண்டையன் குழுதான்


யாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் ஒழுங்கமைக்கப்பட்டு நேற்று நடத்தப்பட்ட கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியினா் அணிந்திருந்த மற்றும் அ வா்களால் பிறருக்கு அணிய கொடுக்கப்பட்ட தொப்பியால் சா்ச்சை எழுந்துள்ளது.

மேலும் குறித்த தொப்பி தொடா்பாக சமூக வலைத்தளங்களில் தொடா்ச்சியாக பல்வேறு விமா்சனங்கள் கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த தொப்பி ஆரம்ப காலங்களில் மண்டையன் குழு என அழைக்கப்பட்ட இந்திய, இலங்கை இராணுவங்களுடன் ஒட்டுக் குழுவான செயற்பட்ட ஈபிஆர்எல் எவ் இனால் பயன்படுத்தப்பட்டதெனவும், அந்த ஒட்டுக் குழுவின் தலைவராக சுரேஸ் பிறேமச்சந்திரன் இருந்தாா் எனவும் சமூக வலைத்தளங்களில் அந்த விமா்சனங்கள் எழுந்து வருகின்றன.

அண்மையில் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஈபிஆர்எல்எவ் மாநாட்டில் அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பில் அவதூறுகள் பரப்பப்பட்ட நிலையில் இந்திய இராணுவத்துடன் இணைந்து ஈபிஆர்எல்எவ் செய்த படுகொலைகள் மண்டையக் குழுப் படுகொலைகள் எனும் பெயரில் பட்டியல் பட்டியலாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவந்தன.

ஆமா நாம மண்டையன் குழுதான் என்பதை ஏற்றுக்கொள்வது போல மண்டையன் குழு பயன்படுத்திய தொப்பியுடன் ஈபிஆர்எல்எவ் அணியினர் நேற்றைய பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

No comments