19 சிங்கள குடும்பங்களிற்கு 16 பௌத்த கிராமங்கள்?


மன்னாரில் 19 குடும்பங்கள் மட்டுமே பௌத்த மதத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் நிலையில் அங்கு 16 பௌத்த கிராமங்கள் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இந்த 19 குடும்பங்களும் 16 கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்கின்றனர். இவ்வாறு வாழும் இந்த 19 குடும்பங்களிற்குமாக மாவட்டத்தில் 5 பௌத்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளது.

ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 500 மக்கள் வாழும் மன்னார் மாவட்டமானது 156 கிராம சேவகர் பிரிவினைக்கொண்டுள்ளது.இந்நிலையில் வெறும் 20 சிங்களக் குடும்பங்கள் வாழும் நிலையில் அவர்களிற்காக 16 கிராம சேவகர் பிரிவினை பௌத்த கிராமங்களாக எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். என சிவில் சமூக அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

பௌத்த சின்னங்கள் அல்லது ஒரு பௌத்த குடும்பமேனும் வாழ்ந்தால் அக் பிராமத்தை பௌத்த கிராமமாக ஏற்றுக்கொள்வது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விபரம் திரட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments