ஜனாதிபதி வேட்பாளராக நானே வருவேன்: கோத்தபாய?


நாடாளுமன்றத்துக்கு வரவோ மாகாண சபைகளுக்கு வரவோ, எனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லை. இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குமாறு, கேட்கப்படவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலரும் இனஅழிப்பின் பங்காளியுமான கோத்தபாய தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டில், அமெரிக்காவிலிருந்து வந்து, ஜனாதிபதித் தேர்தலுக்காகப் பணியாற்றி, ஜனாதிபதியாக மஹிந்த வென்ற பின்னர், மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லத் தயாரானேன். அப்போது, ஜனாதிபதி என்னை அழைத்து, நீங்கள் இராணுவத்தில் இருந்தவர் என்ற ரீதியில், நாட்டில் நிலவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொறுப்பு, உங்களுக்கு இருக்கின்றதெனவும் அதற்காக, பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஏற்றுப் பணியாற்றுமாறும் கூறினார். அதை நான், பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டேன்.

இன்றும், அதேபோன்றதொரு கோரிக்கை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கிடைத்து வருகின்றது. அதனால், அதையும் பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் பொறுப்பு, எனக்கு இருக்கின்றதென நான் நம்புகிறேன். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நான் வருவேன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கின்றது. அதனால் அதை, பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் கடமை எனக்கு இருக்கின்றதென நம்புகிறேன். அதனால், அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நான் வருவேனென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments