உத்தரிப்புக்களின் அல்பம் :தெருவோர புகைப்பட கண்காட்சி


முல்லைதீவு மாவட்ட ஊடகவியலாளர் கே.குமணன் தமிழர் தாயகத்தின் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டங்கள் பற்றிய தன்னால் பிடிக்கப்பட்ட புகைப்படங்களினை உள்ளடக்கிய புகைப்படக்கண்காட்சியொன்றை நாளை 16ம் திகதி சனிக்கிழமை சுப்பிரமணியம் பூங்கா முன்னதாக தெருவோர கண்காட்சியாக நடத்தவுள்ளார்.
பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு குந்தகமற்ற வகையில் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த கண்காட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சிகள் மாறினாலும் நான் சார்ந்த சமுகத்தின் காட்சிகள் மாறவில்லை. சாட்சிகளும் அழியவில்லை. உரிமைக்கான, உறவுகளுக்கான ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் அடங்கவில்லை. நீதி கிட்டுமா என்பதும் கேள்விக்குறியே.

போரின் கோரம் தாண்டவமாடிய முல்லை மண்ணின் மைந்தனான எனக்கு நீதிக்காக ஏங்கும் உறவுகளுக்காக, எதிர்பார்ப்புகளுக்காக ஒரு பங்களிப்னை செய்ய உந்தப்பட்டேன். அதன் விளைவே இந்த புகைப்படக்கண்காட்சி.

விடுதலைக்கு ஏங்கும் எம்மினத்தின் மறுதலைமுறை வரையில் ரணத்தினை அகத்தின்; ஆழத்தில் பதிக்கும் ஒரு சிறு முயற்சியே இது. அகண்ட பாரில் ஆழ்கடல் தாண்டியும் எம் இனத்தின் குரல்களை ஒலிக்கச் செய்யும் ஒரு நகர்வே தான் இது. ஒருதாசப்தத்தின் அழியாப் பதிவுகள் இவையென குமணன் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments