இவ்வாண்டில் பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலாம்?


இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடத்தப்படுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகப் பிரதானிகளுடனான இன்றைய சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படுமெனவும் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமெனவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) தெரிவித்துள்ளார்.

இதனிடையே அவர் சார்ந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறை மைத்திரி இல்லையென்பது தெளிவாகியுள்ளது.

கோத்தபாய களமிறக்கப்படுகின்ற நிலையில் அவர் எதிர்வரும் ஜனவரி 2020இல் தனது அரசியலில் இருந்து ஓய்வு பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments