வடக்கிலிருந்து வைத்தியர்களைத் துரத்தும் வைத்தியர் சங்கம்

யாழ் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் வைத்தியர் சங்கத்தினர் தான்தோன்றித்தனமான முறையில் தொடர்ச்சியாக 3 ஆவது வைத்தியரையும் யாழ்மாவட்டத்தை விட்டு வெளியேற்ற முயன்றுள்ளமை தெரியவந்துள்ளது.

நெடுந்தீவு மருதங்கேணி போன்ற வைத்தியசாலைகக்கு வைத்தியர்கள் இல்லாத நிலையிலும் தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் வைத்தியர் சங்கம் யாழ் மக்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.

வைத்தியர் உமாசுதனை வெளியேற்ற முயன்று தோல்வியுற்ற சங்கம் குருநகர் வைத்தியசாலை பெண் வைத்தியரை கொழும்புக்கு அனுப்ப முற்பட்டு தேல்வியை தழுவியது. தற்போது வரணி வைத்தியசாலையில் திறம்பட செயற்பட்ட வைத்தியரை கொழும்புக்கு அனுப்பி தனது விசுவாசத்தினை காட்டியுள்ளது.

வைத்தியர் சங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் வைத்தியர் செந்தூரன் தனது மனைவி தான் பதிலீடாக வர வேண்டிய நிலையில் தனது தனியார் வைத்தியசாலை வருமானத்திற்காக தொடர்ந்தும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி கதிரையினை பிடித்து வைத்துள்ளார்.

மேலதிக பெண் சுகாதார வைத்திய அதிகாரி உள்ள நிலையில் பதிலீடின்றி  இவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்படக் கூடிய நிலையிலும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments