ஆரிய குளத்திற்குள் பிரமாண்ட புத்தர் சிலை - முறியடித்த சபை


யாழ்.ஆாியகுளத்தை ஆக்கிரமித்து குளத்தின் நடுவே புத்தர் சிலை ஒன்றினை வைப்பதற்கு திரைமறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்கள் சிலரின் வேண்டுகோளை அடுத்து குளத்தை பாதுகாக்கும் வகையில் குளத்தை சூழ பாதுகாப்பு வேலி அ மைக்கும் பணியை யாழ்.மாநகரசபை ஆரம்பித்துள்ளது.

ஆாியகுளத்தை ஆக்கிரமிப்பதற்கு பௌத்த மதம்சாா்பான சிலா் தொடா்ச்சியாக முயற்சித்துவந்ததோடு இரவோடு இரவாக குளத்தில் நடுவே பிரமாண்ட புத்தர் சிலை ஒன்றினை நிறுவுவதற்கும் இரகசிய நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இவ் இரகசியத் தகவலை அறிந்த யாழ் மாநகரச உறுப்பிர்கள் சிலர் உடனடி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தனர். எனினும் மாநகசபை அசமந்த போக்கினை மேற்கொண்டிருந்தது.

இந்நலையில் கடந்த சபை அமர்வின்போது குறித்த விடயத்தினை ஆபத்தான எச்சரிக்கையாக சுட்டிக்காட்டிய நிலையில் யாழ்.மாநகரசபை குளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குளத்தை துாய்மையாக வைத்துக் கெள்வதற்கும், ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் குளத்தை சூழ பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு யாழ்.மாநகரசபை அமா்வில் தீா்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

No comments