சொகுசு பேருந்து பரந்தனில் விபத்து - நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எ-9 பிரதான வீதியில் தரித்து விடப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று சடுதியாக வீதியில் நுழைந்துள்ளது.

இதனையடுத்து சொகுசு பேருந்தின் சாரதி பேருந்தை திருப்ப முயற்சித்தபோது வீதியிலிருந்து விலகிய பேருந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளார்.

மேலும் பேருந்தின் சாரதி உள்ளட்ட 4 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர்.
No comments