கச்சேரியில் சிங்கக்கொடி:பல்கலையில் கறுப்பு கொடி!


இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினநிகழ்வுகள் யாழிலும் இன்று நடைபெற்றிருந்தது. யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயகத்தில் மாவட்ட செய்லர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.இலங்கைப் படையினரின் அணிவகுப்புக்களுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

அரச அதிபர் தலைபையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்தலைவர்கள் யாழ் மாவட்ட இரானுவத் தளபதி அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனால் அதே நேரம் யாழ்.பல்கலையில் மாணவர்கள் தமது கொடிக்கம்பத்தில் இலங்கைக்கொடிக்க பதிலீடாக கறுப்பு கொடியினை ஏற்றிவைத்தனர்.

ஏற்கனவே பல்கலைக்கழக சூழலெங்கும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் அரசிற்கு எதிராக சுலோக அட்டைகளையும் தொங்கவிட்டிருந்தனர். 

No comments