கருமை சூழ்ந்தது யாழ்.பல்கலைக்கழகம்?


நாட்டின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலையில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தை கரிநாளாக பல்கலைகழக மாணவர்கள் பிரகடனப்படுத்தி இருந்த நிலையில் கறுப்பு துணிகள் கட்டப்பட்டுள்ளன.

இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய நாளை கரிநாள் எனக் குறிப்பிட்டு யாழ்பல்கலைக் கழகத்தில் கறுப்புக்கொடி கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. 

இலங்கையின் சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கு சுதந்திரமில்லாத இன்றையநாளை கருநாளாக அனுஷ்டிக்குமாறும் அன்றைய தினம் போராட்டங்களை நடாத்துமாறும்யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பல அரசுயல் கட்சிகளும் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்றும் வடக்கு கிழக்கில் போராட்டங்களை நடாத்தும் மக்களுடன் தாமும் இன்றுஇணைந்து போராட்டங்களை நடாத்துவதாகவும் அறிவித்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திறகு வெளியிலும்உள்ளும் கரிநாள் எனக் குறிப்பிடப்படும் கறுப்புக்கொடி கொடிகளும்தொங்கவிடப்பட்டுருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

No comments