கரையோர ரயில் போக்குவரத்து துண்டிப்பு!


இலங்கையின் களுத்துறை பகுதியில் ரயில் ஒன்று வளைவில் திரும்பும் போது தண்டவாளத்தினை விட்டு விலகி புரண்டதால் கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

காலியில் இருந்து மருதானை வரையிலான ரயிலே இவ்வாறு களுத்துறை பகுதியில் தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அண்மையில் வவுனியாவிலிருந்து சென்றிருந்து ரயில் ஒன்று தனது பெட்டிகளை தனித்து விட்டு பயணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments