மணல் அகழத்தடை!


திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாளையிலிருந்து (15) அமுலுக்கு வரும் வகையில்  இரண்டு வாரங்களுக்கு இத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அசேல  இத்தவல தெரிவித்துள்ளார்.
மணல் அகழ்வுக்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போது, இடம்பெற்றுள்ள மோசடிகள், முரண்பாடுகள் தொடர்பில், விசேட விசாரணையை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கமையவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணைகளின் பின்னர் அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து மணல் அகழ்வை முன்னெடுக்க அனுமதியளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments