எனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்! முருகன் உருக்கம் !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியது. இதுதொடர்பாக, ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பதால், ஏழு பேரும் கடுமையான மனஉளைச்சலில் உள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனும், அவரின் மனைவி நளினியும் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்.

இதனால், அவர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிறையில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டன. இந்நிலையில் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாகவும் அதில் `நான் திடீரென இறந்துவிட்டால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என் உடலைத் தானமாக பெற்று அரசு மருத்துவமனைக்கு வழங்கட்டும்’’ என்று உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

No comments