கிளிநொச்சி போராட்டத்துக்கு வலுச்சேர்த்த புலம்பெயர் உறவுகள்!

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவுகள் தம் பிள்ளைகளின் முடிவுக்கு  நீதி வேண்டியும்,சர்வதேசம்  ஸ்ரீலங்கா அரசுக்கு காலக்கெடு கொடுக்கக் கூடாது என்று 25.02.2018 மாபெரும்  கவனயீர்ப்பு  போராட்டம் கந்தசாமி ஆலய முன்றலில்  ஆரம்பித்து கிளிநொச்சி ஐ.நா சபை  நோக்கி சென்றது.இதில் பெருந்திரளாக மக்களும் பல்கலைக் கழக மாணவர்களும்  அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டனர். எம் உறவுகள் எங்கே? வேசம் போடும் அரசே  பதில் சொல்...                பெற்றோர்களுடன் சரணடைந்த குழந்தைகள் எங்கே,எங்கள் கண்ணீருக்கு முடிவேது,எங்கள் துயருக்கு  பதிலேது.உலகே நீ ஏன் ஊமையாய்  இருக்கிறாய்  நீதி விசாரணை வேண்டும் இல்லையேல் நிலையான விடுதலை வேண்டும்..                       தமிழருக்கு எப்போது சுதந்திரம் என ஆயிரக்கணக்கான  பதாகை கோள்விகளுடன் பேரணி நகர்ந்தது. எம் உறவுகளுக்காக No 10 downing street இல் காலை 10 மணியளவில் பிரித்தானிய தமிழர்  ஒருங்கிணைப்பு குழு தமிழ் இளையோர் அமைப்பினராலும் ஆதரவுக்கான உரிமை போராட்டம் இடம் பெற்றது.அக வணக்கத்துடன் உரிமை போராட்டம் ஆரம்பமாக மக்களும் இளையோர்களும் அனைத்து அமைப்புகளும் அணி திரண்டு *Enough time for srilanka,      End ties with srilanka.         Britain Britain stop aiding    Srilankan genocidal state.     International Investigation on enforced  disappeared.  போன்ற கோஷங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டன. இறுதியாக அனைத்து  அமைப்பினராலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி வேண்டி,எம் தாய்மார்களின் கண்ணீருக்கான பதில் வேண்டிய செயற்பாடுகள்  குறித்து பகிரப்பட்டு இறுதியாக ஒட்டு மொத்த தமிழர்களின் அபிலாசையான தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டு ஆதரவு போராட்டம் நிறைவு பெற்றது,



No comments