வெற்றி இலக்கை நோக்கி யாழில் மீன்பிடி?


யுத்த ஓய்வின் பின்னராக யாழ்.குடநாட்டின் மீன்பிடி முன்னேற்ற கட்டத்தை அடைந்துள்ளது.அவ்வகையில் 2018ம் ஆண்டில் 40 ஆயிரத்து 401 மெற்றிக் தொன் மீன்பிடிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முனைப்பு பெற்ற  1983ஆம் ஆண்டு 48 ஆயிரத்து 677 மெற்றிக்தொன் மீன்பிடிக்கப்பட்டிருந்தது.எனினும் கடல் தடை உள்ளிட்டவற்றால் அத்தொகை பாரிய வீழ்ச்சியை கண்டிருந்தது.

இதன் பின்னர் கூடிய உற்பத்தியாக 2016ஆம் ஆண்டில் 31 ஆயிரத்து 476 மெற்றிக் தொன் உற்பத்தி பெறப்பட்ட நிலையில் கடும் முயற்சியின் பயனாக 2017 ஆம் ஆண்டில்  43 ஆயிரத்து 683 மெற்றிக் தொன் உற்பத்தியாக அதிகரிக்கப்பட்டது. 

இலங்கையின் ஒட்டுமொத்த மீன்தேவையின் ஆறிலொரு பங்கு மீன் யாழிலேயே பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments