இலங்கை சுதந்திர தினத்தில் சிறீதரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!


இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் தரப்புக்கள் அறிவித்துள்ள நிலையில் படையினர் வசமுள்ள கரைச்சி பொதுசன நூலகத்தை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டமொன்றை அதே நாளிதழில் நடத்த தமிழரசுக்கட்சி முற்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபைக்குச் சொந்தமான பொது நூலகம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் என்பன தொடர்ச்சியாக இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து நாளை திங்கட்கிழமை காலை 9.00 அளவில் ஏ-9 வீதியில் அமைந்துள்ள பொது நூலக காணியின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது .

இதனிடையே நாளைய தினத்தை கரிநாளாக கடைப்பிடிக்க தமிழ் தரப்புக்கள் அழைப்பு விடுத்துள்ள போதும் அதனை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மறுதலித்துள்ளார்.

இந்நிலையில் சுமந்திரனிற்கு நோகாமல் மறுபுறம் தாமும் எதிர்ப்பில் குதித்துள்ளதாக காண்பிக்க சிறீதரன் தரப்பின் நாடகமே போராட்டமென் சில தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளன.

No comments