அனுராதபுத்திலும் யாழிலும் ஆயுதங்கள் மீட்பாம்?யாழ்.கொலன் தோட்டம் பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் தோண்டியபோது பெருமளவு ஆயுதங்கள் இருப்பது க ண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலை புலிகளின் சின்னத்துடன் தொப்பி மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட் டுள்ளதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.


இதனிடையே அனுராதபுரம் தகயாகம, ஜெயசிங்க பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் மாநகரசபையினர் வீதியோரங்களை துப்பரவு பணிகளை மேற்கொண்ட போது துப்பாக்கி ரவைகள் வீதியோரத்திலுள்ள வடிகானில் பை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டது. இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்துஅனுராதபுரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடமைகளை மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் -46 எம்.பி.எம்.ஜி துப்பாக்கியினுடையதெனவும், விடுதலைப்புலிகளின் சின்னதுடனான தொப்பி ஒன்றும் புதியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

No comments