சிறிலங்கா பொறுப்புக் கூறத் தயாரில்லை - மிச்சேல் பசெலெட் அம்மையார்

பொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவில் நேற்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட், பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதே, சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் சில முன்னேற்றங்களையே எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
பொறுப்புக்கூறலில் சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாகவும், சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments