இது குவேனி காலமல்ல - யாழில் வித்தைகாட்டும் ரணில்

கூகுள் வரைபடங்களை வைத்துக் கொண்டு பொதுக் காணிகளையும், அரச காணிகளையு ம் வன பகுதிகளாக அடையாளப்படுத்துவதாக பிரதமருக்கு குற்றச்சாட்டு முன்வைக்கப்ப ட்ட நிலையில், வனவள திணைக்கள அதிகாாிகளை அழைத்த பிரதமா் ரணில் விக்கிரம சிங்க இது குவேனி காலம் அல்ல என கூறியுள்ளாா்.

3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்து, யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றம் குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தாா். இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன்

வடமராட்சி கிழக்கில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் மக்களின் காணிகள், பொது இடங்கள் போன்றன ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை கூறியிருந்தாா். இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் அரச காணிகள் அனைத்தும் தமக்கு சொந்தமானது என வனவள திணைக்களம் கூறுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின்

நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் கூறியதுடன், கூகுள் வரைபடத்தை வைத்துக்கொண்டு மக்களுடைய குடியிருப்புக்களையும், அரச காணிகளையும் வனப்பகுதியாக அடையாளப்படுத்துவாகவும், குற்றஞ்சாட்டினா். இதன்போது வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கருத்து தொிவிக்கையில்,

30 வருடங்களுக்கு முன்னா் வனப்பகுதி எப்படி இருந்தது என்பதை வைத்துக் கொண்டு வனப்பகுதிகளை அடையாளப்படுத்தவேண்டுமே தவிர கூகுள் வரைபடத்தை வைத்துக் கொண்டு வனப்பகுதியை அடையாளப்படுத்தக்கூடாது என கூறியதுடன், குறித்த விடயம் தொடா்பாக போதிய கவனம் செலுத்தப்படவேண்டும்

எனவும் கூறியிருக்கின்றாா்.

No comments