உழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா ? ரணிலிடம் சிறிதரன் கேள்வி

எதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா? இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவுக்கு சென்று அங்குள்ள மக்களை சந் தித்து அவா்களுடைய பிரச்சினைகளை கேளுங்கள்,

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்ட பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, ஆளுநருடன் இணைந்து தான் நெடுந்தீவு செல்வதாக உத்தரவாதம் வழங்கியிருக்கின்றாா்.

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் இன்று பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன்

இலங்கையில் உள்ள தீவுகளில் பொிய தீவும், 1432 குடும்பங்கள் வாழுகின்ற தனி பிரதேச செயலா் பிாிவுமான நெடுந்தீவுக்கு யாழ்.மாவட்டத்திற்கு வரும் அபிவிருத்திகள் சென்றடையாமல் இருப்பதற்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பியதுடன்,

1432 குடும்பங்கள் நெடுந்தீவில் வாழ்கின்றன. இன்றுவரை நெடுந்தீவில் ஒரு வீதிகளும் கூட புனரமைப்பு செய்யப்படவில்லை. மேலும் கடந்த ஆட்சியில் இருந்தவா்கள் 3 தடவை வீதிகளை புனரமைப்பு செய்ததாக கூறி பணத்தையும் எடுத்திருக்கின்றாா்கள்.

ஆனால் வீதிகள் எதுவும் புனரமைப்பு செய்யப்படவில்லை. மேலும் வைத்தியசாலைகளில் வைத்தியா்கள் இல்லை, நோயாளா் காவு படகுகள் போதுமான அளவில் இல்லை. இதே நிலைதான் நெடுந்தீவை சூழவுள்ள தீவுகளிலும் உள்ளது.

நீங்கள் எதிா்க்கட்சி தலைவராக இருந்தபோது நெடுந்தீவுக்கு உழவு இயந்திரத்தில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியிரு ந்தீா்கள், பிரதமரான பின்னா் இப்போதும் சென்று அங்குள்ள நிலமைகளை பாருங்கள், என கூறினாா்.

இதற்கு பதிலளித்த பிரதமா் ஆளுநருடன் பேசி தாம் நெடுந்தீவுக்கு செல்வதாக கூறினாா். தொடா்ந்து சுகாதார அமைச்சா் ராஜித சேனாரத்ன பேசும்போது வைத்தியா்கள் பற்றாக்குறை விடயம் தொடா்பாக ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன், நெடுந்தீவு உள்ளிட்ட தீவுகளில் கடமைக்கு செல்லும் வைத்தியா்களுக்கு 50 ஆயிரம் வரையில் ஊக்குவிப்பு தொகை வழங்கப்படவேண்டும் என கூறினாா்.

இது தொடா்பாக ஆராய்வதாக சுகாதார அமைச்சா் உறுதியளித்துள்ளாா்.

No comments