கிளிநொச்சியில் பாடசாலைக்கு பாதுகாப்பு!


கிளிநொச்சியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்கிய கோணாவில் மாணவனுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம்(06) வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசாவின் ஏற்பாட்டில் குறித்த மாணவனின் தந்தை வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தனது மகனின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.இதனையடுத்த வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவல்துறை மா அதிபர் மகிந்த குணரட்னவை தொடர்புகொண்டு கலந்துரையாடியிருந்தனர்.

இதனையடுத்து மாணவனின் தந்தையுடன் உரிய காவல்துறை அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவல்துறை மா அதிபர் மகிந்த குணரட்ன தமக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளில் ஒன்றுக்கு மூன்று பெண்களை கைது செய்யது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மாணவன் தாக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை அதிபருடன் மாணவனின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாட இருப்பதாகவும், சில வாரங்களுக்கு கோணாவில் பாடசாலை ஆரம்பிக்கும் போதும் முடிவுறும் போதும் காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தோடு, மாணவனின் பெற்றொர் எவ்வேளையும் தங்களோடு தொடர்பு கொள்வற்குரிய ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்;.




No comments