சுன்னாகத்தில் வீடொன்றின்மீது பெற்றோல் குண்டுவீச்சு

யாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தொியவருக்கின்றது. இதன்போது குறித்த வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்றினை தீயிட்டு கொளுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments