தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கே லிக்கை விழாக்களை நடாத்துவதை தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நி றைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் இன்று காலை மாதாந்த அமர்வு நடைபெற்றது. இதன் போது தமிழ் தேசி ய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் சபையில் பிரேரணை ஒன்றை சம ர்ப்பித்திருந்தார்.

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய எழுச்சி நாட்கள் மற்றும் நினைவேந்த ல் நாட்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கேலிக்கை விழாக்களை நடத்துவதை தடைசெய்ய வேண்டும்.

குறிப்பாக தமிழ் இன அழிப்பு நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தியாக தீபன் தி லீபனின் ஆரம்ப இறுதி நாள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரர் வாரத்த்தில் இவ்வாறான களியாட்ட, கேலிக்கை நிகழ்வுகளை தடை செய்ய வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுவதற்கு மாநகர சபை அனுமதி வழங்கக் கூடாது. மேலும் சபை எல்லைக்குள் நடைபெறும் நிகழ்வுகளில் சமூகப் பிறழ்வான சூது நடவடிக்கைகளையும் தடை செய்ய வேண்டும் என்ற பிரேரணையை பார்த்தீபன் சபையில் சமர்ப்பித்திருந்தார்.  குறிப்பாக யாழில் இராணுவத் தினால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் மதுபான போத்லினை வெற்றி இலக்காக கொண்டு நடத்த ப்பட்ட நிகழ்வினையும் பார்த்தீபன் சுட்டிக்காட்டினார்.

இப் பிரேரணை மீதான வாதங்கள் நடைபெற்றது. இதன் போது ஈ.பி.டி.பியின் உறுப்பினர் மு.ரெ மிடியஸ் அப் பிரேரணையில் முதல் போராளியான சிவகுமாரின் உயிரிழந்த யூன் 5 ஆம் திகதியி லும் இவ்வாறான கேலிக்கை நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.  மாவீரர் வாரம் முழுவதிலும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என் று தெரிவித்து மாவிரர் வாரத்தில் 26, 27 ஆம் திகதிகளில் கேலிக்கை நிகழ்வுகளுக்கு தடைவிதிக் கலாம் என்ற யாழ்.முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் திருத்தத்துடன் குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

No comments