கேப்பாப்புலவிலும் கறுப்புக்கொடிப் போராட்டம்


இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினமான இன்று வடக்கின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்கக் கோரி 706 ஆவது நாளாக போராடடத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதுடன், எதிர்ப்புப் பதாதைகளும் போராட்ட இடத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.

வெளியிடங்களில் இருந்து பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான, து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், க.சிவநேசன், மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் எனப் பலரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

No comments