மகிந்தவுடன் பேசுவேன் - சம்பந்தன்

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் தீர்வுகளுக்கும் பதில் வழங்க முடியாமல், மஹிந்த தரப்பினரே கூட்டங்களைப் புறக்கணித்தார்களென, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழர்களுக்கான தீர்வு வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில், அசமந்தப் போக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கடைப்பிடித்தது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது சாத்தியமற்றுப் போனதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியமை தொடர்பில் கேட்டபோதே, சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். 

அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும், தாங்கள் பங்குபற்றியதாகவும் தங்களின் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே, பேச்சுவார்த்தைக்கு வராமல் மஹிந்த தரப்பினர் பின்வாங்கியதாகவும் ஆதங்கப்பட்ட சம்பந்தன், பழையதைப் பேசுவது காலவிரயமெனவும் தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, எந்தவேளையிலும் தங்களுடன் பேசமுடியுமெனவும் தமிழ்மக்களின் எதிர்காலத் தீர்வுக்காக, எத்தகைய தரப்பினருடனும் பேசத் தயாரெனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் மிரருக்குத் தெரிவித்தார். 

No comments