ஒலிபெருக்கியின் வயர்களைப் பிடுங்கிஎறிந்து போராட்டத்தில் குழப்பம்



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் போராட்டத்தை வழித்திச்சென்ற ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் மின்சார வயர்களை அறுத்து போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த தமிழரசுக் கட்சியின் கரச்சி பிரதேச சபை உறுப்பினர் சத்தியானந்தன் உள்ளிட்ட சிலர்  முயன்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது தீவிர ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் குறித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர்  போராட்டத்தின் ஆரம்பம் முதல் குழப்பங்களை தோற்றுவித்துள்ளனர்.

இதனை அவதானித்த ஒலிபெருக்கி அறிவிப்பாளர்கள் பதாதைகள் படங்களைச் சுமந்தவாறு பேரணியாக வந்த காணமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த குழுவினரை நிற்காது பின்னகர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தை முன்னின்று வழிநடத்திச் சென்ற முச்சக்கரவண்டியினை இடைமறித்த குறித்த கும்பல் அதில் பயணித்த அதில் அறிவிப்புச் செய்தவர்களுடன் கடுமையாக வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதோடு ஒலிபெருக்கிச் சாதனத்தின் மின்கார இணைப்பு வயர்களையும் அறுத்துச் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த ஊடகவியலாளர்கள் அதனைப் புகைப்படம் மற்றும் வீடியோவில் பதிவுசெய்ய முற்பட்டபோது ஊடகவியலாளர்களும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

No comments