றோகண விஜயவீரவின் மகன் அரசியலில்ஜேவிபி ரணில் அரசிற்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில்  றோகண விஜயவீரவின் மகன் அரசியலில் குதிக்கவுள்ளார்.

1987- 88 ஆம் ஆண்டுகளில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்ட ஜனதா விமுக்திப் பெரமுன என்று சிங்களத்தில் அழைக்கப்படும் ஜே.வி.பி யின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர அரசியலில் ஈடுபடவுள்ளார். அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான தற்போதைய ஜே.வி.பி ரோஹன விஜேவீரவின் குடும்பத்துடன் முரண்பட்டுள்ளது.

 இந்த நிலையில் உவிந்து விஜேவீர புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளையும், தனது தந்தையின் சோசலிசக் கொள்கையையும் பின்பற்றவுள்ளதாகக் கூறியுள்ளார். ரஷியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்ட உவிந்து விஜேவீர. சமீபத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்

No comments