கேப்பாபிலவு தொடர்பான ஆளுநரின் கூட்டம் இழுபறியில் முடிவு

கேப்பாபிலவு மக்களுடைய பூா்வீக காணிகளை விடுவிப்பது தொடா்பாக வடமாகாண ஆளுநா் சு ரேன் ராகவனுக்கும் கேப்பாபிலவு மக்களுக்குமிடையிலான சந்திப்பு, முல்லைத்தீவு மாவட்ட செய லகத்தில் நேற்று இடம்பெற்ற நிலையில், தீா்வு எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்திருக்கின்றது.

வட மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராஜா, முல்லைத்தீ வு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுடன் போராட்டத் தில் ஈடுபட்டுவரும் மக்கள் 3 பேரும்

கலந்து கொண்டு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  கலந்துரையாடலுக்கு ஊடகங்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கலந்துரையாடலில் இறுதியில் ஊடகங்களுக்கு க ருத்து தெரிவித் ஆளுநர் காணி உரிமையாளர்களும் இராணுவத்தினரும் நேரடியாக சந்தித்து தமது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு மக்கள் மத்தியில் காணி தொடர்பான குழப்பம் உள்ளதால் குழு ஒன்றை அமைத்து அதனூடாக மக்களின் விருப்பங்களை அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கேப்பாபுலவு மக்கள் தமது காணிகள் குறித்து மாற்று கருத்துக்களை கொண்டுள்ளமையால் இறுதித் தீர்மானத்தை எட்ட முடியாத நிலமை காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது காணி விடுவிப்பு தொடர்பில் ஒரு கருத்தினையும் போராடடத்தில் ஈடுபடாத பத்து பேர் அளவில் வேறு ஒரு கருத்தினையும் கூறுவதால் இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments