ஆகஸ்ட் 15 இற்குள் மாகாணசபைத் தேர்தல்


மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது.

மேற்கண்டவாறு தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன,  மாகா­ண­ச­பைத் தேர்­தல் நடத்­தப்­ப­டாமை தொடர்­பில் பல விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்­பில் தேர்­தல்­கள் ஆணைக்­குழு வட்­டா­ரங்­க­ளைக் கேட்­ட­ போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தன.

இலங்­கை­யில் மாகா­ண­ச­பைத் தேர்­தல் நடத்­தப்­ப­ட­ வில்­லை­யா யின், மாகா­ண­சபை முறைமை நாட்­டில் இருக்­கத் தேவை­யில்லை.  ஆயுள் காலம் முடி­வ­டைந்த 6 மாகா­ண­ச­பை­க­ளுக்­ கான தேர்­தல் நடத்­தப்­ப­டா­மல் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றன.

தேர்­தல்­கள் ஆணைக்­குழு 9 மாகா­ண­ச­பை­க­ளுக்­கு­ மான தேர்­தலை ஒரே நாளில் நடத்­தத் தயா­ராக இருக்­கின்­றது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச உள்­ளிட்ட எல்­லோ­ரும் மாகா­ண­ச­பைத் தேர்­தல்­கள் நடத்­தத் தயார் என்று கூறு­கின்­றார்­கள். ஆனால் மாகா­ண­ச­பைத் தேர்­தல் நடத்­த­மு­டி­ய­வில்லை. தூங்­கு­ப­வர்­களை எழுப்­ப­லாம்.

ஆனால் தூங்­கு­ப­வர்­கள் போன்று நடிப்­ப­வர்­களை எழுப்ப முடி­யாது. மாகா­ண­ச­பைத் தேர்­தல்­களை எதிர்­வ­ரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திக­திக்கு முன்­னர் நடத்த முடி­யும் என்று எதிர்­பார்ப்­ப­தாக தேர்­தல்­கள் ஆணைக்­குழு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

No comments