பொறிவெடியில் சிக்கி இளைஞன் பலி

முல்லைத்தீவு- வவுனிக்குளத்தில் மீன்பிடிக்க குளத்திற்குச் சென்றவர் மானுக்கு வைத்த பொறி வெடியில் அகப்பட்டதனால் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பம் நேற்று இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் 34 அகவையுடைய சுரேஸ்குமார் என்னும் அம்பாள்புரத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளம் 6ம் கட்டைப் பகுதியில் உள்ள வவுனிக்குளத்தின் அலைகரைப் பக்கம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றபோதும் மாலை 6 மணிக்கு பின்பே அப்பகுதிக்குச் சென்றோர்  அவதானித்து அவசர நோயாளர் சேவைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவ்வாறு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் விரைந்த நோயாளர் காவு வண்டி காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மல்லாவி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும் எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தமை வைத்மியர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவரின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேநேரம் சம்பவம் தொடர்பில் மல்லாவிப் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments