கொக்குவிலில் வாகனங்கள் தீக்கிரை?


யாழ்ப்பாணத்தில் ஏட்டிக்கு போட்டியாக நடந்துவரும் குழு மோதல்களின் தொடர்ச்சியாக திருநெல்வேலி கொக்குவில் கருவப்புலன் வீதியில் வீட்டினில் தரித்திருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்படடுள்ளது. சற்று முன்னர் பட்டப்பகலில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் குழுவொன்று தீயிட்டு கொழுத்தியுள்ளது. 

இந்நிலையில் அந்த இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற டாண் தொலைக்காட்சியின் வீடியோ படப்பிடிப்பாளரை பொலிஸார் தாக்கியுள்ளனர்.எனினும்தாக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை.

அமைச்சர் விஜயகலாவின் ஆதரவாளரான குறித்த வீடியோ படப்பிடிப்பாளர் வேலை பெற்று தருவதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு கைதாகி சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நபராவார்.

இந்நிலையில் காவல்துறையுடனான மோதலே தாக்குதலிற்கு காரணமென சொல்லப்படுகின்ற போதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே அண்மையில் நாயன்மார்கட்டு பகுதியில் வீடொன்றில் தரித்து வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றும் இதே பாணியில் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments