ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி! கனடாவில் கோரச் சம்பவம்!

கனடாவில் கலிபக்ஸ் நகரில் நள்ளிரவில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தில் ஒரே கும்பத்தைச் சேர்ந்த ஏழு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

 ஆழ்ந்த தூக்கத்தில்  தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியதால் அயலவரகள் ஓடிச் சென்று பார்த்தனர். தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கினர்.

தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிரியா அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments