அரசாங்கத்தை பாதுகாத்ததைத்தவிர கூட்டமைப்பு மக்களுக்கு என்ன செய்தது

இலங்கையிலும், ஐ.நா உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிலும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்து அரசின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்ப்படாமல் பாா்த்துக் கொண்டாா்களே தவிர அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீா்ப்பதற்கு தமிழ்தேசிய கூ ட்டமைப்பு என்ன செய்துள்ளது? என ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் தலைவா் சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

அக்கட்சியின் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு க ருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

உள்நாட்டிலும் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக் களிலும் அரசைப் பாதுகாத்து அதற்கு அழுத்தங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்களே த விர அரசின்மீது எவ்வகையான அழுத்தங்களைக் கொண்டுவர முயற்சித்தார்கள்? தமிழ் மக்க ளின் தன்னெழுச்சியான போராட்டங்களைக்கூட சரியான முறையில் பயன்படுத்தி அவர்களது காணிப்பிரச்சினைகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளை தீர்ப்ப தற்கு இவர்களால் முடியவில்லை. தமிழ் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வடக்கு-  கிழ க்கு இணைந்த மாகாணம் ஒன்றை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பைச் செலுத்தியது.

திரு கோணமலையை தமிழ் மக்களின் தலைநகரமாக்கிரூபவ் மாகாண நிர்வாகத்திற்கான கட்டுமாணங்களை உருவாக்கியது. இராஜதந்திரமாரூபவ் இருப்பை அழிப்ப தற்கான சமிக்ஞையா? ஆனால் இன்று வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு இரண்டு மாகாணங் களாக ஆக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

மக்கள் காணிகளை விடுவிக்கும்படி போராட்டம் நடத்த அரசாங்கம் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரிலும் தொல் பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சிப் பிரதேசங்கள் என்ற பெயரிலும் வனவிலங்குகள்  பாதுகா ப்பு மற்றும் வனவள பாதுகாப்பு என்ற பெயரிலும் பெரிய அளவில் காணிகளைச் சுவிகரித்து அ வற்றை சிங்கள குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றது.

வடக்கு-கிழக்கில் இந்துக்கோவில்கள் இருக்கின்ற இடங்கள் அபகரிக்கப்பட்டு இராணுவம் பொ லிஸ் துணையுடன் பௌத்த வணக்கஸ்தலங்களாக மாற்றப்படுகிறன. இவற்றுக்கெதிரான நீதி மன்றத் தீர்ப்புகள் நிராகரிக்கப்பட்டு தூக்கி வீசப்படுகின்றது. பௌத்த மக்கள் இல்லாத இடமெ ல்லாம் இரவோடு இரவாக புத்தர் சிலைகள் நாட்டப்பட்டு இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. ஆனால் அரசை ப் பாதுகாக்கும் எமது மக்களின் பிரதிநிதிகளால் இவை எதனையும் நிறுத்த முடியவில்லை.

அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழரக் கட்சி தலைமைகள் அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்று பிரச்சாரம் செய்கின்றனரே தவிர அதன் பாதகத்தன்மையை உ ணர்வதாகவும் இல்லை. திருகோணமலையிலிருக்கும் தமிழ் மக்களின் புனிதஸ்தலமான கன்னியா வெந்நீருற்றைக் கூட எமது தலைவர்களால் பாதுகாக்க முடியவில்லை. புதியதோர் அரசியல் சாசனத்தினூடாக இவை எல்லாவற்றிற்கும் முடிவு கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையிலோ என்னவோ இவை தொ டர்பான எந்த நடவடிக்கைளும் இவர்களால் மேற்கொள்ளப்படவில்லை.

விடுதலைப் புலிகள் மௌனிக்கப்படுவதற்கு முன்னரும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்திலும் ஒவ்வொரு வரவு-செலவு திட்டத்திற்கும் எதிராகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்து வந்தது. ஆனால் தேசிய அரசாங்கம் என்று சொல்லக்கூடிய மைத்திரி-ரணில் கூட்டரசாங்கத்தை கூட்டமைப்பினர் எவ்வித நிபந்தனைக ளும் இல்லாமல் கண்மூடித்தனமாக ஆதரித்தனர். அன்று பாதுகாப்பு அமைச்சுக்கு பல்லாயிரம் கோடிகள் ஒதுக்குவதாகவும் தமிழரை அழிக்கவே இத்தொகை பயன்படுத்தப்படுவதாகவும் நாம் எடுத்துக் கூறி வரவு-செலவுத் திட்டங்களை எதிர்த்தோம்.

ஆனால் யுத்தம் இல்லாத இன்றைய காலகட்டத்திலும் வருடாந்தம் பாதுகாப்பு நிதி அதிகரிக்கப்பட்டே வருகின்றது. எமது கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஆதரித் தே வருகின்றனர். எதிர்வரும் மார்ச் மாதம் வரவுள்ள வரவு-செலவுத் திட்டத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி அவர்கள் ஆதரிப்பார்கள் என்பதும் வெளிப்படையானது. இந்தப் பாதுகாப்பு நிதியினூடாக மேலும் மேலும் பௌத்த ஆலயங்கள் நிறுவப்படும்.

புதிய சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படும். இராணுவத்திற்கான கோட்டை கொத்தளங்கள் உருவாக்கப்படும். தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் பறிமுதல் செய்யப்படும். ஆனால் இவை எல்லாம் நடைபெற்றாலும்கூட எந்தவிதமான நிபந்தனைகளுமில்லாமல் தொடர்ச்சியாக வரவு-செலவு திட்டங்களை ஆதரிப்பது என்பதுதான் இவர்களுடைய இராஜதந்திரமா அல்லது தமிழ் மக்களின் இருப்பை அழிப்பதற்காகக் காட்டும் பச்சைவிளக்கா?

அரசியல் சாசனத்தைக் காப்பாற்றியதால் மக்களுக்குக் கிடைத்ததென்ன? கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019வரை தமிழ் மக்களின் பல கோரிக்கைகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்த்திருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் அரசு நிலைத்திருக்க முடியாது என்ற சூழ்நிலையில்ரூபவ் காணிகளை முழுமையாக விடுவித்தல்ர அரசியல் கைதிகளை விடுவித்தல் காணி ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் பலாத்காரமான பௌத்த கோயில்கள் அமைப்பதை நிறுத்துதல் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல் போன்றவற்றையாவது செய்திருக்கலாம்.

ஆனால் இவை தொடர்பாக ஆக்கபூர்வமான அழுத்தங்களைக் கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என்பது மாத்திரமல்லரூபவ் கண்மூடித்தனமாக ஜனாதிபதியையும் இலங்கை அரசையும் நம்பினார்கள்.

ஆறுகடக்கும் வரைதான் அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்பதுதான் சிங்கள தலைமைகளின் வரலாறு என்பது முதிர்ந்த அரசியல்வாதியான சம்பந்தனுக்கு  தெரியாததல்ல. ஆனாலும்கூட இந்த அரசை அவர் ஆதரித்து வருகின்றார். மைத்திரியை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று மார்தட்டினார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வடக்கின் அபிவிருத்தி அமைச்சராக தாங்கள்தான் ஆக்கினோம் என்றார்கள். சர்வதேச சமூகம் எம்முடன் நிற்கிறது என்றார்கள். இராஜதந்திரப் போர் நடக்கிறது என்றார்கள். இவைஎல்லாவற்றிற்கும் ஊடாக தமிழ் மக்கள் நலன்சார்ந்து இவர்கள் எதனை சாதித்தார்கள்? கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்ரூபவ் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றிரூபவ் தனது விரோதியென அவர் கூறிவந்த மகிந்த ராஜபக்ச அவர்களை பிரதமராக்கினார்.

இவற்றிற்கெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்றம் சென்றது. மகிந்த ராஜபக்ச அவர்களை பிரதமராக்கியது அரசியல் யாப்பிற்கும் 19ஆவது திருத்தத்திற்கும் எதிரானது என்று வாதாடி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்க 24 மணிநேரமும் பணிபுரிந்தார்கள். அதுமாத்திரமல்லாமல் ஐ.தே.க.விற்கு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிலைநாட்ட தனது உறுப்பினர்களின் சத்தியக் கடதாசிகளை வாங்கி நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்த அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை பிரதமராக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டனர். இவ்வளவும் செய்து முடித்ததன் பின்னர் தமிழ் மக்களுக்குக் கிடைத்தது என்ன? - என்றார்.

No comments