கஞ்சா கைதடியில் தானாக வளர்ந்ததாம்?


தனது வேலைத்தளத்தில் கஞ்சா செடியை பூஞ்செடி என நினைத்தே வளர்த்ததாக அந்தர்பல்டியடித்துள்ளார் சிங்கள தொழிலாளியொருவர்.அதனால் தான் அதனை அழிக்காது விட்டேன் என, கஞ்சா வளர்த்தார் விளக்கமும் அளித்துள்ளார்.

கைதடி நாவற்குழி பகுதியில் புதிதாக அமைப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) சென்ற பொலிஸார் அங்கு வளர்ந்த கஞ்சா செடியை மீட்டனர்.அத்துடன் அங்கிருந்த தென்னிலங்கை தெல்தெனியை சேர்ந்த கட்டட தொழிலாளியையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்று (11) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அங்கு நடைபெற்ற வழக்கு விசாரணையின்  போது, கட்டடத்தில் அந்த செடி தானாகவே வளர்ந்தது. அதனை பூஞ்செடி என நினைத்தே அகற்றாது விட்டேன் என கட்டட தொழிலாளி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த நபரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசு பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.

No comments