புளொட் வெளியீடு தீபம் தீக்கிரை?


புளொட் சித்தார்த்தன் குழுவின் வழிநடத்தலில் யாழில் மூச்சிழுத்துக்கொண்டிருக்கின்ற தீபம் எனும் வார இதழ் இன்று பருத்தித்துறையில் வைத்து மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்ற சிறுகதை எழுத்தாளர் ஒருவரை ஆசிரியராக கொண்டு இயங்கும் குறித்த வார இதழ் நோர்வேயை சேர்ந்த வைத்தியர்.சிவகணேசன் உள்ளிட்ட சிலரது முதலீட்டில் இயங்குவதாக ஒரு தரப்பும் இந்திய உளவு கட்டமைப்பின் நிதியில் இயங்குவதாக இன்னொரு தரப்பும் கூறுகின்றது.

விடுதலைப்போராட்டத்தை அதன் வரலாற்றை திரிபுபடுத்தி கதை சொல்லும் நாளிதழ் தனது பரபரப்பிற்கு இரவு இரண்டுமணிக்கு பெண் கேட்டார் தேசிய தலைவரென முன்பக்க தலைப்பிட்டு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்துடன் இம்முறை தனது வெளியிட்டை பிரசுரித்திருந்தது.

தமிழக கொலையாளி ஒட்டோ சங்கர் கதைக்கு இத்தகைய தலைப்பிட்டு மலின விளம்பரம் தேடமுற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதனிடையே இழுத்து மூடப்படும் நிலையினை அடைந்துள்ள வார இதழை பிரபல்யப்படுத்த இத்தகைய நாடகத்தை அரங்கேற்றுவதாக சொல்லப்படுகின்றது.

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் தொடர்பி;ல் திரிபுபடுத்தப்படுகின்ற கதைகளை புளொட் சித்தார்த்தன் மற்றும் சிவராம் கொலையாளி ஆர்.இராகவன் ஆகியோரது ஆலோசனையில் பலமுறை குறித்த இதழ் பிரசுரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

  

No comments