வவுனியாவில் மக்கள் எழுச்சி!


தாயகத்தில் இலங்கை அரசை படைகளாலும் துணை ஆயுதக்குழுக்களாலும் வலிந்து காணாமால் ஆக்கபட்டோருக்கு நீதி கோரி இன்று 30 ஆம் திகதி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால்  மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பதாக ஏ-9வீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள், ஏனைய தனியார் நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மட்டுமின்றி சர்வதேசத்தினாலும் எந்ததொரு தீர்வும் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்கின்றது.

ஜநா அமர்வு நடைபெறவுள்ள நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments