‘ஈரான் - இலங்கை நட்புறவுத் திரைப்படவிழா’



ஈரான் கலாசார நிலையமும் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் பிரிவும் இணைந்து ‘ஈரான் - இலங்கை நட்புறவுத் திரைப்படவிழா” ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. 

இத் திரைப்படவிழா ஜனவரி மாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெறவுள்ளது. 

இத்திரைப்படவிழாவில் மாலை 2.00 மணிக்கு ‘பொடிகாட்’  என்ற திரைப்படமும், மாலை 4.30 மணிக்கு ‘ட்ரக் 143’  என்ற திரைப்படமும் திரையிடப்படவுள்ளன. 

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கையிலுள்ள ஈரான் Àதரகத்தினால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments