இலங்கையின் பொதுப்போக்குவரத்து ?


இலங்கையின் வடக்காயினும் சரி தெற்காயினும் சரி சராசரி பொதுமக்கள் நெருக்கடிகள் மத்தியிலேயே வாழ்க்கையினை கொண்டு நடத்திவருகின்றனர். இரவு நேரம் ஒன்பது மணி முப்பது நிமிடம் மாத்தறை நகரில் இருந்து ஊருபொக்க செல்லும் இறுதி பஸ்வண்டி. ஏறிச்செல்ல இடமில்லாமல் பஸ்ஸின் டிக்கியில் அமர்ந்துகொள்கிறார்கள். இவர்களின் பின் பக்கம் சூட்டினால் நிச்சியமாக வெந்திருக்கும். இலங்கையின் பெரும்பாலான இடங்கள் இப்படித்தான் என சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகியிருக்கின்றது இந்த புகைப்படம்.

இரவு வீடு திரும்பும் போது எமது அரசியல்வாதிகளை தூள் பறக்க ஏசிவிட்டு மறுநாள் அவனுக்கே வாக்களிக்கிறேம். போக்குவரத்துச் செய்யும் அடிப்படை உரிமையை கூட செய்து தராத இந்த அரசியல்வாதிகள் தான் எம்மை டிக்கியில் உட்காரவிட்டு தேசப்பற்று பற்றி எமக்கு பாடம் கற்பிக்கிறார்கள் என சூடான விமர்சனங்களும் பறக்கின்றன.

வடக்கிலும் இரவு நேரகாலத்துடன் பிரதான வீதிகள் முடங்கிவிடுவதுடன் பொதுப்போக்கு முடங்கிவடுவது வழமையாகும்.  

No comments